×

மனைவியுடன் கடத்தி படுகொலை செய்யப்பட்டஓசூர் நந்தீஷ் குடும்பத்துக்கு தி.க. சார்பில் ரூ.1 லட்சம் உதவி

ஓசூர், ஜன.22: ஓசூரில், காதல் மனைவியுடன் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் குடும்பத்தினருக்கு தி.க. சார்பில் ₹1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவ்டம் ஓசூர் சூடுகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தீஷ். இவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, காதல் மனைவியுடன் கடத்திச்செல்லப்பட்டு கர்நாடக மாநில எல்லையில் ஆனைக்கல் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, நந்தீஷ் குடும்பத்தினருக்கு கடந்த டிசம்பரம் மாதம் 30ம் தேதி தி.க. தலைவர் வீரமணி நேரில் ஆறுதல் கூறினார். அப்போது, நிதியுதவி அளிப்பதாக உறுதி கூறினார். இந்நிலையில், ஓசூரில் உள்ள பாகலூர் ஹட்கோவில் செயல்பட்டு வரும் பெரியார் படிப்பகத்தில் தி.க. கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வனவேந்தன் தலைமை வகித்தார்.

பொதுச்செயலாளர் அன்புராஜ் கொடியேற்றி வைத்து பேசினார். மேலும், ஆணவ படுகொலை செய்யப்பட்ட நந்தீஷின் பெற்றோர் நாராயணன்-திம்மக்கா, சகோதரி அகிலா, சகோதரர் சங்கர் ஆகியோரிடம் ₹1 லட்சம் நிதியுதவி வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்டஅமைப்பாளர் முனுசாமி, மாநில அமைப்பாளர் குணசேகரன், மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், அறக்கட்டளை உறுப்பினர் எழிலரசன், பொதுக்குழு உறுப்பினர் துக்காராம், மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, ப.க. மாநில துணைத்தலைவர் அண்ணா சரவணன், தர்மபுரி மண்டல செயலாளர் திராவிடமணி, மாவட்ட ப.க. தலைவர் பேராசிரியர் வணங்காமுடி, செயலாளர் சிவந்தி அருணாச்சலம், நகர தலைவர் மணி, நகர செயலாளர் செல்லதுரை, மகளிரணி மாவட்ட அமைப்பாளர் கண்மணி, மாவட்ட தலைவர் செல்வி, மாவட்ட செயலாளர் லதா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மாணிக்கம், ஓசூர் ப.க. மாவட்ட அமைப்பாளர் ஜெகநதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Naushir ,
× RELATED மனைவியுடன் பஸ்சில் வந்த டிரைவர் திடீர் சாவு