×

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு பென்சனர்கள் கூட்டமைப்பு ஆதரவு

திருப்பூர், ஜன. 22:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என அமைப்பின் மாநில தலைவர் சாமிநாதன் நேற்று தெரிவித்தார். அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் சாமிநாதன் நேற்று கூறியதாவது: 2011ம் ஆண்டு அளித்த வாக்குறுதிப்படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை அமலாக்க வேண்டும். நீண்ட போராட்டத்துக்கு பின் 1988ம் அமலாக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை 2006 மற்றும் 2016 திருத்தத்தில் இடைநிலை ஆசிரியர் உட்பட சில பிரிவினருக்கு மறுக்கப்பட்டுள்ள அநீதியைக் களைக்க வேண்டும்.

மாண்டிசோரி, நர்சரி, கிண்டர் கார்டன் பயிற்சி பெற்றவர்களை கொண்டு நடத்த வேண்டிய முன்பருவ வகுப்புகளை தொடக்க கல்வித்துறையில், பயிற்சி பெறாத இடைநிலை ஆசிரியர்களை சமூக நலத்துறையின் கீழ் நடத்தப்படுகிறது, இதை கைவிட வேண்டும். மேலும் மறுக்கப்பட்டுள்ள 21 மாத ஊதிய திருத்த நிலுவையை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ், இன்று (22ம் தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் என போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் நியாய தீர்வு வழங்க வேண்டும். அதனால், ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு ஆதரவை தெரிவிக்கிறது என்றார்.

Tags : Pencans Federation ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...