×

வெள்ளகோவிலில் நீதிமன்றம் அறிவித்த ஆட்டோ கட்டணம் அமலுக்கு வந்தது

வெள்ளக்கோவில், ஜன. 22:  வெள்ளக்கோவிலில் பயணிகள் பயணிக்கும் ஆட்டோக்கு நீதிமன்றம் அறிவித்த கட்டணத்துடன், முதன் முறையாக டிஜிட்டல் மீட்டருடன் நடைமுறைக்கு வந்துள்ளது. நீதிமன்றம் அறிவித்த குறைந்தப்பட்ச கட்டணம் 1.80 கிலோ மீட்டருக்குள், அல்லது அதற்குள் இறங்கினால் ரூ.25 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்டோகுமார் கூறியதாவது: வெள்ளக்கோவிலில் மீட்டர் இருந்தாலும் ஆட்டோ ஓட்டுநர் கேட்கும் கட்டணமே வசூல் செய்யப்படுகிறது. மூன்று பேருக்கு மட்டுமே பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில நேரங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது.

இதனால் நான் வெள்ளக்கோவில் கடை வீதியில் அதிகபட்ச தூரமாக 1.80 கிலோ மீட்டர் தொலைவிற்கு, எங்கு ஏறி, எங்கு இறங்கினாலும், ரூ.25 மட்டுமே மினிமம் கட்டணமாக வசூல் செய்கிறேன். மேலும் ஆட்டோவின் மூன்று புறமும் மினிமம் கட்டணம் ரூ.25 என எழுதப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு கிலோ மீட்டர் சென்றால் ரூ.12ம், காத்திருக்கும் நேரம் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ரூ.3.50 எனவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கட்டணம் அதிகமாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு பயணிகள் ஆட்டோவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு படி கட்டண நிர்ணயம் செய்துள்ளது. அதன்படியே எனது ஆட்டோ கட்டணம் பெற்று வருகிறேன் என தெரிவித்தார்.

Tags : court ,Vellakovil ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...