×

விவசாயிகள் சங்க மாநாடு

திருப்பூர், ஜன. 22:  திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 2வது மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு சவுந்தரராஜன் தலைமை வகித்தார். கேசவன், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க கொடியை சுப்பிரமணி ஏற்றினார். மாநாட்டை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் துளசிமணி துவக்கி வைத்தார். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட துணை செயலாளர் இசாக், பழனிச்சாமி, மணி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிட்டு பூமிக்கு அடியில் கேபிள் மூலம் கொண்டு செல்ல வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனைமலை-நல்லாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஊத்துக்குளி ஒன்றிய, நகர பேரூர் கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.இந்த மாநாட்டில் மாவட்ட தலைவராக சின்னச்சாமி, துணை தலைவராக கேசவன், செயலாளராக சின்னச்சாமி, பொருளாளராக சவுந்திரராஜன், துணை செயலாளராக கந்தசாமி உட்பட 15 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags : Farmers Association Conference ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளை...