×

காங்கயம் அருகே மாசடைந்த நொய்யல் நீரை பயன்படுத்தும் கிராம மக்கள்

காங்கயம், ஜன.22:   கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகி திருப்பூர், ஈரோடு மாவட்டம் வழியாக 178 கி.மீ., தூரம் நொய்யல் ஆறு செல்கிறது. கோவை நகரத்தில் உள்ள கழிவு நீரையும், திருப்பூரில் வெளியேற்றப்படும் சாய நீருடன் வினாடிக்கு 60 கன அடி நீர்  நொய்யலில் இருந்து காவிரி ஆற்றில் நீர் கலந்து வருகிறது. இந்த நீரில் திடக்கழிவுகளின் அளவு அதிகம் உள்ளதால், இதனை விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில்லை. ஆனால் நொய்யல் கரையோர மக்கள், தற்போதும் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த நீரையே பயன்படுத்தி வருகின்றனர். காங்கயம் அருகே பல கிராம மக்கள் நொய்யல் ஆற்று கழிவு நீரிரை அன்றாட தேவைகளுக்கும், துணி துவைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காங்கயத்தை அடுத்த பழைய கோட்டை பகுதி பொதுமக்கள் கூறியதாவது: மழை காலங்களில் ஆற்றில் சுத்தமான தண்ணீராக வரும், அதனை அனைத்து தேவைகளுக்கும் இன்றளவும் எடுத்து பயன்படுத்தி வருகிறோம். கோடை காலங்களில் தண்ணீரின் நிறம் மற்றும் வாசனையை பொறுத்து  துணிகளை ஆற்று நீரில் துவைத்து கொள்கிறோம். கிராமங்களில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் சாக்கடை மற்றும் சாய நீருடன் வரும் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம். எனவே அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும், என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : kollam ,
× RELATED மார்க்சிஸ்ட் மீது பொய் புகார் கொல்லம்...