×

வருசநாட்டிலிருந்து தினமும் 50 ஆயிரம் தேங்காய் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி

வருசநாடு, ஜன.22:  வருசநாடு பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தினசரி 50 ஆயிரம் தேங்காய் ஏற்றுமதியாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, குமணன்தொழு போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான தென்னை மரங்கள் உள்ளது. இதில் சில்லறை வியாபாரிகள் தேங்காய்களை பறித்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் தேங்காய் விலை தற்போது 17 ரூபாயிலிருந்து 18 ரூபாய் வரை விலை போகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருசநாடு பகுதியில் இருந்து தினசரி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தேங்காய்கள்  ஏற்றுமதியாகி வருகிறது. இவை முதல், இரண்டாம், மூன்றாம் என  தரம் பிரித்து ஏற்றுமதி செய்வது வழக்கமாக உள்ளது.

 இதுகுறித்து விவசாயி ஈசுவரனிடம் கேட்டதற்கு, `` ஒவ்வொரு நாளும் கடமலை - மயிலை ஒன்றியத்திலிருந்து தேங்காய் ஏற்றுமதி அதிகம் செய்து வருகிறோம் ஆனால் தென்னை மரங்களுக்கு தேவையான மழையில்லாததால் தற்போது தேங்காயின்  வளர்ச்சி குறைந்துள்ளது. எனவே, தேங்காயை தரம் பிரித்து மூன்று பிரிவுகளாக அனுப்பி வருகிறோம். இதில் முதல் தரம் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும், இரண்டு, மூன்றாம் தரமுள்ள தேங்காய் திருப்பூர், காங்கேயம், சென்னை,கோவை போன்ற நகரங்களுக்கு அனுப்பி வருகிறோம். மேலும் விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைக்க அரசு நிர்ணய விலை கொடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : country ,
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...