×

ஆண்டிபட்டியில் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா

ஆண்டிபட்டி, ஜன.22: ஆண்டிபட்டியில் மன்னர் திருமலை நாயக்கரின் 436 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் மகாராஜன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அமமுக சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில், மருத்துவர் அணி செயலாளர் கதிர்காமு, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சந்திரன், தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பாஜ நிர்வாகி வேல்முருகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஆண்டிபட்டி வட்டார நாயுடு மகாஜன சங்கம் சார்பில் கவுரவ தலைவர் சுப்புராஜ் தலைமையில், வட்டார துணைத் தலைலர் செளந்திரராஜன், வட்டார செயலாளர் எஸ்.எம்.ராஜா, நகர தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Tirumalai Nayakar Birthday Celebration ,Andipatti ,
× RELATED பிரிந்து சென்றவரை சேர்த்து...