×

போலி பதிவெண்ணில் இயங்கிய 2 தனியார் ஆம்னி பஸ் பறிமுதல்

திருச்சி, ஜன. 22: கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி போலி பதிவெண்ணில் இயக்கப்பட்ட இரண்டு ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூரில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தொழில் செய்வோர் என பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் ஏராளமான ஆம்னி பஸ்களும் இயக்கப்பட்டது.  திருச்சியில் இருந்து சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு சுமார் 250 சிறப்பு பஸ்கள் விடப்பட்டது.  வெளியூரில் பணியில் இருந்த ஏராளமானோர் முன்னதாகவே சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். மேலும், மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பொதுமக்கள் திரண்டதால் கடந்த 2 நாட்களாக மத்திய பஸ்நிலையம் கடும் நெரிசலால் சிக்கி திணறியது. பெரும்பாலான பயணிகள் அதிகமாக தனியார் ஆம்னி பஸ்களையே நாடினர்.
பொதுமக்களின் அதிகளவு வருகையை அடுத்து திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களில் போலி பதிவெண் கொண்ட 2 ஆம்னிகள் இயங்குவதாக ஆர்டிஓ உமாசக்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய பஸ்நிலையத்தில் சோதனை செய்தபோது, 2 ஆம்னி பஸ்கள் போலி பதிவெண்ணில் இயக்கப்பட்டது தெரியவந்தது. போலி பதிவெண் கொண்ட 2 பஸ்களை பறிமுதல் செய்த ஆர்டிஓ உமாசக்தி இதுகுறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குபதிந்த இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு, இதுதொடர்பாக ஜெயபிரகாஷ், சத்யராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.



Tags : Omni ,
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி