×

காரைக்குடியில் இன்று மின்குறைதீர் கூட்டம்

சிவகங்கை, ஜன.22: காரைக்குடியில் மின் பயனீட்டாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சின்னையன் தெரிவித்ததாவது, காரைக்குடியில் ஜனவரி மாதத்திற்கான மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் இன்று, காலை 11 மணி முதல் 1 மணி வரை காரைக்குடி மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் காரைக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளவும். இவ்வாறு தெரிவித்தார்.


Tags : meeting ,Karaikudi ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்