×

மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழா

தேவகோட்டை, ஜன. 22: தேவகோட்டை கருதாவூரணி வடகரையில் மலைக்கோயில் நேற்று தைப்பூசத் திருவிழா நேற்று நடைபெற்றது.
தேவகோட்டை கருதாவூரணி வடகரையில் மலைக்கோவில் என்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. பழனியில் உள்ள சுவாமி தண்டாயுதபாணியைப் போல மூலவர் அதே உயரத்தில் காட்சி தருகிறார். ஒவ்வொரு கார்த்திகை நாளன்று விசேஷ அபிஷேக அலங்காரம் மற்றும் அன்னதானம் நடைபெறும். 70 அடி உயரத்தில் 77 படிக்கட்டுகளைக் கொண்ட இக் கோவிலில் கடந்த 8 வருடங்களாக பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று தைப்பூச நாளன்று சுவாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில் டிரஸ்டி சிவலிங்கம் செட்டியார் குடும்பத்தினர்  விழா ஏற்பாடுகளை விரிவாக செய்திருந்தனர்.

Tags : festival ,hill temple ,
× RELATED ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா