×

பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஊட்டி, ஜன. 22: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் காலியாக உள்ள 10 துப்புரவு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் இயங்கம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பி.சி., முன்னுரிமை-1, முன்னுரிமையற்றது-2, எம்.பி.சி.,முன்னுரிமையற்றது-2, பொது முன்னுரிமையற்றது-1, எஸ்.சி., முன்னுரிமையற்றது-1 என மொத்தம் 7 ஆண் துப்புரவு பணியாளர்களும், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., முன்னுரிமை பிரிவில் தலா 1 வீதம் 3 பெண் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.

இப்பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனசுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பதாரர் தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர், எஸ்.சி., எஸ்.டி., இனத்தவருக்கு அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு தளர்த்தப்படுகிறது. துப்புரவு பணியாளர் பணியில் உரிய தகுதிகளுடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள், ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ேடார் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Tags : cleaning staff ,MBCs ,
× RELATED நாடாளுமன்றத்தில் 146 எம்பிக்கள்...