×

வனப்பகுதியில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவு

குன்னூர், ஜன.22:  குன்னூர் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேட்டுப்பாளைம்-குன்னூர் வரை மலை ரயில் சேவை உள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பெரும்பாலும் மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள விரும்புவர். இதனால், மேட்டுப்பாளைம்-குன்னுார் வரை   பழமை மாறாத  பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் நான்கு பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வனப்பகுதிகள் நிறைந்த மலைப்பாதை வழியாக ெசல்வதால் இயற்கை அழகை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மலைரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டு
கின்றனர்.

இவ்வாறு மலை ரயிலில் பயணம் ெசய்யும் சுற்றுலா பயணிகள் சிலர் தாங்கள் பயன்படுதும் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், திண்பண்ட கவர்கள் உள்ளிட்ட  பிளாஸ்டிக் குப்பைகளை வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால் வன விலங்குகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என வனஉயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முன்னதாக பிளாஸ்டிக் தடை குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வரும் நிலையில் வனப்பகுதிகளில்  பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருவது வனத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் வன விலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மலை ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்