×

தனியார் தொழிற்சாலையால் பாதிப்பு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

ஊட்டி, ஜன. 22: நீலகிரி மாவட்டம் ேகத்தி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியுறும் புகையால் அட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள மக்களுக்கு பல்வேறு பாதிப்பு ஏற்படுவதாக கூறி, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஊட்டி அருகேயுள்ள கேத்தி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊசி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையை சுற்றிலும் எல்லநள்ளி, அடக்கொலை, பெரிய பிக்கட்டி போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இத்தொழிற்சாலை 24 மணி நேரம் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியூர் புகை மற்றும் கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்தது. இந்நிலையில், தற்போது இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் கிராம மக்களுக்கு ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற சுவாச பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பகுதி மக்கள் மாசு கட்டுப்பாட்டு வரியத்திடம் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள், ஆய்வு மேற்கொண்டதில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இருந்து வெளிேயறும் புகையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை உறுதி செய்துள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட ெதாழிற்சாலையில் உள்ள புகை போக்கி மற்றும் பிளாண்டை அகற்றவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். ஆனால், கடந்த பல மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அட்டுக்கொல்லை கிராம மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை ஊர் தலைவர் புட்டன் தலைமையில் நேற்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எல்லநள்ளி அட்டுக்கொல்ைல கிராம மக்கள் 15 ஆண்டுகளாக இயங்கி வரும் ஊசித் தொழிற்சாலையை  அகற்றும் படி தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.  

ஆனால், இதுவரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.   மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நளினி, கடந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி, ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதிகளில் இந்த தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி கோவையில் உள்ள இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையால் மக்கள் பாதிப்பதாக கூறி, அந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால், இதுவரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தலைமை நிர்வாகம் இந்த தொழிற்சாலை மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, அட்டுக்கொல்லை கிராம மக்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி இந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பிளாண்டை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags : Collector ,factory ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...