×

பாசிப்பருப்பு சூப்

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் பாசிப்பருப்பைக் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின்பு அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் கேரட், தக்காளி சேர்த்து, நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க   வேண்டும். பின் அதில் ஊற வைத்துள்ள பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 3 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். பின் அதில் உள்ள பட்டை மற்றும் கிராம்பை நீக்க வேண்டும். அடுத்து குக்கரில் உள்ள அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் சுவைக்கேற்ப மிளகுத் தூள் சேர்த்து கிளற வேண்டும். ஒருவேளை சூப் மிகவும் கெட்டியாக இருந்தால், நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். இறுதியாக சூப்பை ஒரு பௌலில் ஊற்றி பரிமாறும் போது, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி பரிமாற வேண்டும். இப்போது சுவையான பாசிப்பருப்பு சூப் தயார்.

Tags :
× RELATED நுங்கு ஜூஸ்