×

காட்டு தீயால் பாதிப்பு தேயிலைத்தோட்டத்தில் முகாமிட்ட யானைகள்

பந்தலூர், ஜன.22: பந்தலூர் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயால் நேற்று யானைகள் அரசு தேயிலைத்தோட்டத்தில் முகாமிட்டன. இதனால் தோட்ட ெதாழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடும் உறைபனி பெய்து வருகிறது. அேதபோல் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில் புற்கள், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. இதனால் எளிதில் காட்டு தீ பரவும் அபாயம் இருந்து வந்தது. மேலும் காட்டு தீயை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென  சேரம்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட அரசு தேயிலைத்தோட்ட சரகம் ஒன்று பகுதியில் காட்டு தீ ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ பரவியது. இதில், மூங்கில் உள்ளிட்ட அறிய வகை செடிகள் தீயில் கருகின. இதற்கிடையே காட்டு தீ அச்சத்தால் யானைகள் அரசு தேயிலை தோட்டத்தில் முகமிட்டது. இதனால் காலையில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் யானைகளை கண்டு அச்சம் அடைந்தனர். பின் அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Tags : Elephants ,tea plantation ,
× RELATED முதுமலை முகாமில் குழந்தையை போல் உறங்கிய தாயை பிரிந்த குட்டி யானை