×

தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் ஜாக்டோ-ஜியோ


திண்டுக்கல், ஜன.22: தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் மிரட்டலுக்கும், அடக்குமுறைக்கும் அஞ்சமாட்டோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஜாக்டோ, ஜியோ போராட்டம் தொடரும் என கூட்டமைப்பு மாநில நிதி காப்பாளர் மோசஸ் திண்டுக்கல்லில் தெரிவித்தார்.திண்டுக்கலில் நேற்று ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பின் மாநில நிதி காப்பாளர் மோசஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசை கண்டித்து இன்றிலிருந்து தொடரும் வேலைநிறுத்தத்தையொட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.

அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளைய (இன்று) தினத்திலிருந்து வேலைக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு ஊதியம் கிடைக்காது என்று மிரட்டலோடு அறிக்கை விட்டிருக்கிறார். இந்த அடக்குமுறையை, இப்படிப்பட்ட எச்சரிக்கை அறிக்கையின் மூலமாக ஜாக்டோ, ஜியோ தனது போராட்ட பாதையிலிருந்து பின்வாங்காது. தொடர்ந்து தனது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும். நீங்கள் எத்தனை அடக்குமுறைகளை ஏவி விட்டாலும், இருக்கக்கூடிய 12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளைய(இன்று) தினத்திலிருந்து அனைத்து அலுவலகங்களிலிருந்து மற்றும் தாசில்தார் அலுவலகம் வரையும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி முதல் ஆரம்பப்பள்ளி வரைக்கும் இருக்கக்கூடிய அத்தனை ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது உறுதி மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

Tags : Tamil Nadu Government ,Jacotto ,
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...