×

பட்டாசு வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை

சிவகாசி, ஜன. 22: விருதுநகர் மாவட்டத்தில், 2 ஆயிரத்து 200 பயனாளிகளுக்கு 1.41 கோடியில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் நேற்று காலை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை தமிழக அரசு கொடுத்து வருகிறது. பட்டாசு வழக்கில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. தமிழக முதல்வர் ஆலோசனைப்படி, பட்டாசு வழக்கில் தனி வழக்கறிஞர் வைத்து வாதாடி வருகிறோம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. சாதகமான தீர்ப்பு வரும் என நம்பிக்கையோடு இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பார்த்தசாரதி மல்லலையா, ஆர்டிஒ தினகரன், தாசில்தார் பரமானந்தராஜா, யூனியன் ஆணையாளர்கள் சுப்பிரமணியன், சங்கரநாராயணன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, சண்முகக்கனி, மயில்சாமி, வேல்முருகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வேண்டுராயபுரம் காளிமுத்து, ஆரோக்கியம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rajendra Balaji ,
× RELATED எடப்பாடிதான் பிரதமரா வரணும்…அடம் பிடிக்கும் ராஜேந்திர பாலாஜி