×

இடிந்து விழும் அபாயத்தில் ஊராட்சி அலுவலக கட்டிடம்

பாபநாசம், ஜன. 22: ஈச்சங் குடியில் இடிந்து விழும் நிலையில் அபாயத்தில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே அமைந்துள்ளது ஈச்சங்குடி கிராமம். ஈச்சங்குடியில் இருந்து திருவையாறு 5 கிலோ மீட்டர் தொலைவாகும். பாபநாசம் 18 கிலோ மீட்டராகும். இந்த ஊராட்சியில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டிடம் கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இருந்தபோது ஊராட்சி  அலுவலகத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட எஸ்டிமேட் அனுப்பியும் ஆளுந்தரப்பினர் கண்டு கொள்ளவில்லை. இதனால் மன்ற கட்டிடம் விரிசல் விட்டும், செடி வளர்ந்தும் புதர்மண்டி கிடக்கிறது. எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாத கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Panchayat Office building ,collapse ,
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...