×

திருச்சேறை சாரநாதபெருமாள் கோயிலில் தைப்பூச தேரோட்டம்

திருவிடைமருதூர், ஜன. 22:  திருச்சேறை சாரநாதபெருமாள் கோயிலில் தைப்பூச  தேரோட்டம் நடந்தது.திருவிடைமருதூர் திருச்சேறையில் சாரநாதபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் 108 திவ்யதேசங்கள் வரிசையில் 12வது திவ்யதேசமாகும். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலாகும். வைணவ திருத்தலத்திலேயே தைப்பூசம் நடைபெறும் ஒரே கோயிலாகும். இந்த கோயிலில் தைப்பூச தேர் திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 18ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 19ம் தேதி காலை ஏகாந்த சேவை, சூர்ணாபிஷேகம், பஞ்சலட்சுமிகளுடன் பெருமாள் கோ ரதத்தில் வீதியுலா நடந்தது. 20ம் தேதி வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது. இந்நிலையில் நேற்று காலை அதிகாலையில்    மூலவர் தங்கமுலாம் அங்கிசேவை நடந்தது. இதைதொடர்ந்து ேதரோட்டம் நடந்தது. வடம் பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர். திருவிடைமருதூர் எம்எல்ஏ கோ.வி.செழியன், திருவிடைமருதூர் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அசோக்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் செம்மங்குடி முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி திருவிடைமருதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மாறன் தலைமையில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார், செயல் அலுவலர்   மற்றும் கோயில் பட்டாச்சாரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : plant ,Tirunekara Saranathaperumal ,
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...