×

கனிராவுத்தர் குளத்தில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு

ஈரோடு,  ஜன.22:  ஈரோடு கனிராவுத்தர்குளம் சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்திற்கு கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீர் குளத்தில் சேகரமாகும். தற்போது, கீழ்பவானி வாய்க்காலில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் திறக்கப்பட்டதால் கனிராவுத்தர் குளத்தில் தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சியளித்தது. குளம் முழுவதும் தற்போது ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘இந்த குளத்தின் மூலமாக சுற்று வட்டாரத்தில் பெரியசேமூர், சின்னசேமூர், சூளை, எல்லப்பாளையம் வரை நிலத்தடி நீருக்கு பற்றாக்குறை வந்தது கிடையாது.

இந்த குளம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தூர்ந்து போனது. கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் தேங்க வழிவகை செய்தோம். பின்னர், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குளத்தில் தண்ணீர் தேங்கி பார்க்க ரம்மியமாக இருந்தது. நாங்களும் குளத்தின் தண்ணீரை பயன்படுத்தி வந்தோம். ஆனால், குளத்தில் சாக்கடை நீர் கலந்து, அதன்மூலம், ஆகாய தாமரைகள் குளத்தை ஆக்கிரமித்துள்ளது. இதனால் நாங்கள் குளத்தின் தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் குளத்தில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றி, சாக்கடை நீர் குளத்திற்குள் கலக்aகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Lotus ,Crown ,
× RELATED கட்சி மாறுவதற்கு பாஜவினர் செல்போன்...