×

மாசிமக விழாவையொட்டி கோயில்களில் பந்தல்கால் நடும் விழா

கும்பகோணம், ஜன. 22:  மாசிமக விழாவையொட்டி கும்பகோணத்தில் உள்ள கோயில்களில் பந்தல்கால் முகூர்த்தம் நடந்தது.
மாசிமக விழா என்பது மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பவுர்ணமி நாளும், மக நட்சத்திர நாளும் இணைந்து வரும் நாளில் மாசிமக விழா கொண்டாப்படுகிறது. இதுவே சிம்ம ராசியில் குருபகவான் வந்தால் மாசி மகாமக விழா நடைபெறுவது சிறப்பாகும்.
இவ்விழாவையொட்டி ஆதிகும்ேபஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 5 சிவன் கோயில்களிலும், சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, வராகபெருமாள் சுவாமி ஆகிய மூன்று கோயில்களிலும் நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
சிவன் கோயில்களில் பிப்ரவரி 10ம தேதி கொடியேற்றமும், 18ம் தேதி பஞ்சரதம் தேரும், 19ம் தேதி மகாமக குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது. பெருமாள் கோயில்களில் பிப்ரவரி 11ம் தேதி கொடியேற்றம், 19ம் தேதி தேரோட்டம், மாலையில் காவிரி ஆற்றின் சக்கரபடித்துறையில் தீர்த்தவாரி நடக்கிறது.

Tags : Festival ,Pandalam ,temples ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...