×

ஒர்க்ஸ்ஷாப் அதிபர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் கைது

அந்தியூர், ஜன.22: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒலகடம் பகுதியைச் சேர்ந்தவர் கைலாசம் (40). இவர், அந்தியூரில் உள்ள தவிட்டு பாளையத்தில் கடந்த நான்கு மாதங்களாக டிங்கரிங் ஒர்க்ஸ்ஷாப் நடத்தி வந்தார். இவரது மனைவி ஹேமலதா (22). இத் தம்பதிக்கு இரண்டரை வயதில் சிவவர்ஷினி என்ற மகள் உள்ளார். கைலாசம் ஒர்க்ஸ்ஷாப் சென்ற பின்னர், ஹேமலதா அருகில் உள்ள உறவினர் ஆனந்தி  என்பவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த ஆனந்தியின்  சகோதரர் ஆனந்திற்கும் (23), ஹேமலதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் ஆனந்த், ஹேமலதாவை அழைத்து கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். இதுகுறித்து கணவர் கைலாசம் பவானி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தன்பேரில் போலீசார் ஹேமலதாவை மீட்டு கணவர் கைலாசத்துடன் அனுப்பி வைத்தனர். இதையடுத்து கைலாசம் தனது மனைவி, குழந்தையுடன் மாமனார் கண்ணன் வீட்டில் தங்கி ஒர்க்ஸ்ஷாப்பிற்கு தினமும் மனைவி, குழந்தையுடன் சென்று வந்தார். இந் நிலையில், ஆனந்த் மீண்டும் ஹேமலதாவை அழைத்து செல்ல திட்டமிட்டார்.

அதன்படி, கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஆனந்த், கைலாசத்திடம் வந்து ஹேமலதாவை தான் அழைத்து செல்வதாக கூறி உள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆனந்த் கத்தியால் கைலாசத்தை குத்திக் கொலை செய்தார். அந்தியூர் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தை தேடி வந்த நிலையில் குன்னம் பகுதியில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஹேமலதாவையும் போலீசார் கைது செய்தனர். இருவரையும் பவானி ஜேஎம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : workshop ,Kallakadalan ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...