×

நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொன்னமராவதி பஸ் நிலையம் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொன்னமராவதி,ஜன.22:  பொன்னமராவதி பஸ் நிலையம் நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் நடவடிக்கை எடுக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பொன்னமராவதி பஸ்நிலையத்திற்கு தினசரி சென்னை, கோவை, திருச்சி,  திருப்பூர்,ஈரோடு, ராமேஷ்வரம், சிதம்பரம், தஞ்சாவூர் , புதுக்கோட்டை, துவரங் குறிச்சி,  காரைக்குடி, திருப்பத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு  அரசு மற்றும் தனியார் பேரூந்துகள் அதிக அளவு சென்று வருகின்றது.
மினி பஸ்களும் செல்கின்றனர். அதிக அளவு பஸ்கள் மற்றும் அதிக அளவு  பயணிகள் வந்து செல்லும் இந்த பஸ் நிலையத்திற்கு போதுமான  இடவசதியி ல்லை. இதனால் பேரூந்து நிலையத்தில் இருந்த அண்ணாசாலை வரை  போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுகின்றது.
மேலும் சனி மற்றும்  செவ்வாய்கிழமைகளில் கூடும் சந்தைக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து  செல்கின்றனர். சந்தைக்கு வருபவர்கள் இருசக்கர வாகனங்கள், நான்கு  சக்கரவாகனங்கள் இந்த பஸ் நிலையத்தில் நிறுத்தப்படுவதால் பஸ்கள்  வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
பஸ் நிலையத்தில் அதிக அளவிலான மாடுகள்  நிற்கின்றது. இதனாலும் போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ளது என பஸ் டிரைவர்கள் தெரிவக்கின்றனர். பெருகி வரும் போக்குவரத்துக்கு ஏற்ப பஸ் நிலைத்தை விரிவாக்கம் செய்து அடிப்படை தேவைகளாக குடிநீர்,  கழிப்பறைவசதி, தூய்மை போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,Ponnaravarathi ,crisis ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை