×

கஜா புயல் நிவாரணம் கேட்டு தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஆலங்குடி,ஜன.22: ஆலங்குடி அருகே கஜாபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்  வழங்காததை கண்டித்து தாலுகா அலுவலகத்தை பெண்கள் மற்றும் பொதுமக்கள்  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட  பல்வேறு கிராமங் களில் கஜாபுயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீள  முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கஜா புயலால்  பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 17 ஆயிரம் ஓடு மற்றும் கூரை வீடுகளுக்கு அரசின்  நிவாரண பொருட்கள் வழங்கப் படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில்  அறிவிக்கப்பட்டு நிவாரணம் வழங்கும் பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு  வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள  மாஞ்சன் விடுதி ஊராட்சிக்குட்பட்ட மழவராயன்பட்டியில் சுமார் 250 க்கும்  மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கஜா புயலின்  கோரதாண்ட வத்தால் இப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும்  இழந்து ள்ளனர். மேலும், இப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட விஏஓ  அலுவலகத்தில் பாதிக்கப் பட்டதற்கான புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களை  இணைத்து கொடுத்துள்ளனர். ஆனால், புயலால் பாதிக்கப்பட்ட இப்பகுதி  பொதுமக்களுக்கு வழங்கவேண்டி அரசு நிவாரணம் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை  இது வரை வழங்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து, மீண்டும் அப்பகுதி பொது  மக்கள் சம்மந்தப்பட்ட விஏஓ அலுவலகத்திற்கு சென்று கேட்ட போது, நிவாரண  பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று காலம் தாழ்த்தி  வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும்  பொதுமக்கள் நேற்று ஆலங்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொது மக்களிடம் வருவாய் ஆய்வாளர்கள் வினோதினி,  ரெங்கராஜன், ஆலங்குடி போலீசார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது பெண்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு உடனடியாக அரசு நிவாரண  பொருட்கள் , நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, முறையாக அனைத்து மக்களுக்கும் நிவாரணம்  வழங்கவும், பழுதடைந்த வீடுகளுக்கான நிவாரணத்தொகையை வங்கி கணக்குகளில் உடனடி  யாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து,  முற்று கை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து  சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொடுக்காமல் பாதிப்புகள் இல்லாதவர் களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதாக பொதுமக்கள் கூறி அவ்வப்போது சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிவாரண பொருட் கள் கேட்டு புதுக்கோட்டை, அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Tags : People siege ,office ,storm ,Taluka ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...