×

திமுக செயல் வீரர்கள் கூட்டம்

புதுக்கோட்டை,ஜன.22: புதுக்கோட்டை  மாவட்ட திமுக அலுவலகத்தில் புதுக்கோட்டை நகர திமுக செயல் வீரர்கள் கூட்டம்  நடை பெற்றது. நகர அவைத்தலைவர் ரெத்தினம் தலைமை  வகித்தார். நகர செயலாளர் னைநாமுகமது வரவேற்றார். மாநில நெசவாளர் அணி  செயலாளர்  சச்சிதானந்தம்  முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட  பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி, வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ பெரியண்ணன்  அரசு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப் பாண்டியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் வரும் மார்ச் 1ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள்  விழா வை சிறப்பாக கொண்டாட வேண்டும் உட்பட பல தீர்மானம் நிறை வேற்றப் பட்டது.  மேலும் வட்ட கழக ஆய்வு செய்யப்பட்டது.  கூட்டத்தில் சொத்து பாதுகாப்பு  குழு உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : Meeting ,DMK ,staffers ,
× RELATED கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்