×

அரசமலை வையாபுரி சுப்பிரமணியர் கோயிலில் தைப்பூச தேரோட்டம்

பொன்னமராவதி,ஜன.22: பொன்னமராவதி அருகே அரசமலை வையாபுரி சுப்பிரமணியர் கோயிலில் தைப்பூசத்தை  முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. தைப்பூசம் அன்று மாலை  தேரோட்டம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா  கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தினசரி  மண்டகப்படி நடைபெற்றது. இதன் பின்னர் நேற்று 21ம்தேதி சுவாமிக்கு சிறப்பு  வழிபாடு நடத்தப்பட்டு அங்கிருந்து சுவாமியை தேரில் வைத்து வழிபாடு  செய்தனர்.இதன் பின்னர் கோயிலை சுற்றியுள்ள பொது மக்கள் தேரை வடம் பிடித்து  இழுத்து சென்று வழிபட்டனர்.
இதே போல தேனிமலை சுப்பிரமணியர் கோயில், பொன்னமராவதி  பாலமுருகன் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில், உலகம்பட்டி ஞானியார் மடம்  முருகன் கோயில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும்  அன்னதானம் நடைபெற்றது.


Tags : plant ,Vyapuri Subramania ,
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...