×

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தைப்பூச தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

பாடாலூர், ஜன. 22: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் தைப்பூசத்  திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.             பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் இரவு அலங்கார வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
19ம்  தேதி  சனிக்கிழமை சுவாமி திருக்கல்யாண உற்சவமும், இரவு சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.  நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.  நேற்று காலை பஞ்சமூர்த்தி சுவாமிகள் ஒரு தேரிலும் அம்பாள் சுவாமி ஒரு கேரிலும்  எழுந்தருளல் நிகழ்ச்சி  நடைபெற்றது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை 4.20 மணிக்கு  நடைபெற்றது. தேரோட்டத்தில் பாடாலூர், இரூர், கூத்தனூர், பொம்மனப்பாடி, சத்திரமனை, குரூர், சிறுவயலூர், ஆலத்தூர் கேட், நாட்டார்மங்கலம், பெரகம்பி உள்ளிட்ட சுற்றுப்புற   கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி ரவிந்திரன், பாடாலூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.



Tags : devotees ,Chettikulam Ekambareswarar Temple ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...