×

பொங்கலே முடிந்து விட்டது இனி எதற்கு இலவச வேட்டி, சேலை

திண்டிவனம், ஜன. 22:   தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலை ஆண்டுதோறும் தமிழக அரசால்வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு திண்டிவனம் தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளிமேடுப்பேட்டை, தாதாபுரம், கிராண்டிபுரம், சாலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் நேற்று தான் இலவச வேட்டி சேலை வழங்குவதற்காக திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லாரிமூலம் அலுவலக ஊழியர்கள் மற்றும் நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றது.  ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இலவச வேட்டி, சேலை வழங்கி வந்த நிலையில் அதனை முதியவர்கள், ஆதரவற்றவர்கள் ஏழை எளியவர்கள் சந்தோஷமாக உடுத்தி வந்த நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை பொங்கல் பண்டிகை முடிந்து தாமதமாக வழங்கப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், எப்போதும் பொங்கல் பண்டிகையின் போது, பொங்கலுக்கு முன்னதாகவே ஏழை, எளியவர்களும் பொங்கல் பண்டிகையின் போது, புது துணிகள் உடுத்தி மகிழ வேண்டும் என்ற நோக்கில், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஏழை, எளியர்கள், முதியவர்கள் பயன்பட்டு வந்தனர்.
ஆனால், இந்தாண்டு பொங்கலுக்கு இதுவரை இலவச வேட்டி, சேலைகள் வழங்காமல் எங்களை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. மேலும், இனிமேல் வேட்டி, சேலை வழங்கி என்ன பயன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.






Tags : Pongal ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா