×

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி

விழுப்புரம், ஜன. 22:  விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி ெஜயக்குமார் வெகுமதி வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் வரஞ்சரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த முதல்நிலைக்காவலர் சிவமுருகன் கடந்த 16ம் தேதி பானையங்கால் கிராமத்தில் இரு சமூகத்திற்கிடையே ஏற்பட்ட சாதிமோதல் மற்றும் 19ம் தேதி ’ஆற்றுத்திருவிழாவின்போது விருகாவூர், பொரசக்குறிச்சி ஆகிய இருகிரா
மத்தினருக்கும் வெவ்வேறு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல்களை தனி ஒருவனாக நின்று போராடி பிரச்னையை தடுத்து நிறுத்தியுள்ளார். இதேபோல் கோட்டக்குப்பம் சோதனைச்சாவடி சிறப்பு எஸ்ஐ சங்கர், போலீசார் இஸ்மாயில், இளையராஜா ஆகியோர் புதுச்சேரியிலிருந்து கடத்திச்சென்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில், காரை பறிமுதல் செய்து சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இதேபோல் நெடுஞசாலைரோந்து வாகனம் எண்2ல் பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ மனோகரன், போலீசார் வெங்கடேசன், அருள்ராஜ், இளையராஜா ஆகியோர் கடந்த 19ம் தேதி பிடாகம் ஆற்றுத்திருவிழாவில் காணாமல்போன
7 வயது சிறுவனை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறப்பாக பணியாற்றிய போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் தனது அலுவலகத்தில் பாராட்டி வெகுமதி வழங்கினார். அப்போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை