×

திருக்கோவிலூரிலேயே செயல்பட வேண்டும்

திருக்கோவிலூர், ஜன. 22:     திருக்கோவிலூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய தாலுகாவை தலைமையிடமாக கொண்டு திருக்கோவிலூர் வருவாய் கோட்டமாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் செயல்பட்டு வந்தது. அப்போது மூன்று தாலுகாவிற்கும் சேர்த்து திருக்கோவிலூரில் கோட்ட கலால் அலுவலகம் இயங்கி வந்தது. இதில் விழுப்புரம் தாலுகா மட்டும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவிலூர் கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. அது முதல் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை தாலுகாவை கொண்டு திருக்கோவிலூர் கோட்ட கலால் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த கலால் அலுவலகத்தில் டாஸ்மாக் மற்றும் மது விலக்கு தொடர்பான அனைத்து பணிகளும் மேற்கொண்டு வந்தனர். திருக்கோவிலூரில் இயங்கி வந்த திருக்கோவிலூர் கோட்ட அலுவலகம் அதே பெயரில் அதிகாரிகள் நிர்வாக வசதி என கூறி கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் இடமாற்றம் செய்து அங்கேயே செயல்பட்டு வருகிறது.
 ஆனால் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், விழுப்புரத்தில் மட்டும் அங்கேயே கோட்ட அலுவலகத்தை செயல்படுத்தி வருகின்றனர். திருக்கோவிலூரில் இயங்கி வந்த கோட்ட கலால் அலுவலகத்தை திருக்கோவிலூர் நகரின் வளர்ச்சியை சீர்குலைக்கும் வகையில் ஒரு சில அதிகாரிகள் நிர்வாக வசதியை காரணம் காட்டி விழுப்புரத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் மதுவிலக்கு மற்றும் டாஸ்மாக் நிர்வாக பணிகளுக்கு வருவாய்த்துறையின் ஓர் அங்கமான கலால் பிரிவுக்கு விழுப்புரம் செல்ல வேண்டி உள்ளது. ஆகையால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து திருக்கோவிலூரில் இயங்கி வந்த கோட்ட கலால் அலுவலகத்தை மீண்டும் இங்கேயே செயல் பட உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை