×

சங்கராபுரத்தில் வேகத்தடைக்கு வெள்ளை அடிக்கும் பணி

சங்கராபுரம், ஜன. 22:சங்கராபுரம்- கள்ளக்குறிச்சி சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. இதில் வர்ணம் ஏதும் அடிக்காததால் தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்த வேகத்தடைக்கு வெள்ளை அடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சர்மா உத்தரவின்பேரில் வேகத்தடைக்கு வெள்ளை அடிக்கும் பணி தொடங்கியது. சங்கராபுரம்- கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைக்கு வெள்ளையடிக்கப்பட்டது. இதனால் விபத்துக்கள் குறையும்
என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : White ,Sankarapuram ,
× RELATED ஒயிட் ரோஸ் விமர்சனம்