×

விழுப்புரம் கேபிள் டிவி வட்டாட்சியர் அலுவலகத்தை ஆப்ரேட்டர்கள் முற்றுகை

விழுப்புரம், ஜன. 22: அரசு கேபிளில் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதால் விழுப்புரத்தில் கேபிள்டிவி தாசில்தார் அலுவலகத்தை ஆப்ரேட்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் 70,390 அரசு கேபிள் இணைப்புகள் உள்ளது. இவற்றில் மாதந்தோறும் ரூ.175, ரூ.125 என 2 பேக்கு
கள் உள்ளது. இதன் அடிப்படையில் செட்டப் பாக்ஸ் வழங்கப்பட்டும், வழங்கப்படாமலும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வீடுகளுக்கு ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பல இடங்களில் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட கேபிள் ஆப்ரேட்டர்களிடம் வாக்கு
வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து நேற்று கேபிள் ஆப்ரேட்டர்கள் விழுப்புரம் கேபிள் டிவி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இத்தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.
அப்போது கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கூறுகையில், இரண்டுவிதமான பேக்குகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் வாடிக்கையாளர்
களிடமிருந்து பெறப்படும் தொகையில் அரசுக்கு ரூ.88.74 வீதம் செலுத்தப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் கடந்த மாதத்திற்கான சந்தா தொகையை இம்மாதம் செலுத்தி வந்தோம். தற்போது இம்மாத தொகையை இம்மாதமே செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே சந்தா தொகையை கொடுக்கமாட்டார்கள். இதனால் இம்மாத தொகையை செலுத்தாததால் ஒளிபரப்பை தடை செய்துள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்றனர்.இதுகுறித்து கேபிள் டிவி வட்டாட்சியர் தரப்பில் கேட்டபோது, முன்பெல்லாம் போஸ்ட் பெய்டு சிஸ்டம் இருந்தது. தற்போது பிரிபெய்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விரும்பிய சேனலை பார்க்கும் வகையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னமும் 28,800 செட்டப் பாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.




Tags : Vilupuram ,Vatashirar Office ,operators ,siege ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!