×

விழுப்புரம் மாவட்டத்தில் தைப்பூச திருவிழா

விழுப்புரம், ஜன. 22: விழுப்புரத்தில் தைப்பூச விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளலார் அருள்மாளிகையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.தைப்பூசத்ைதயொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது. விழுப்புரம் ரயிலடி பாலமுருகன் உள்ளிட்ட கோயில்களில் அதிகாலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதேபோல் விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் 78வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நடந்தது. அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றுதல், அகவல் பாராயண வழிபாடு, கொடியேற்றம், திருத்தேர் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. ஏழு திரைகள் நீக்கி ஆறுகால ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் ஜோதி வழிபாடு, இறை வணக்கவுரை, வள்ளலார் வரலாறு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த சு.குளத்தூர் சரவணபுரத்தில் உள்ள  ஆறுமுகபெருமான் கோயிலில் தைப்பூசவிழா நடைபெற்றது.
முன்னதாக 108 வேள்வி  பூஜைகள் மற்றும் காவடி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் முருகனுக்கு அபிஷேக  ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சிறப்பு  விருந்தினராக ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், அரசை  இளஞ்செழியன், மாரி, வடிவேல், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டு  ஆறுமுகபெருமானை வழிபட்டனர். இதேபோன்று காட்டுவன்னஞ்சூரில் உள்ள முருகன்,  சங்கராபுரம் வள்ளலார் மன்றத்திலும் தைப்பூசவிழா கொண்டாடப்பட்டது.

Tags : festival ,Villupuram district ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...