×

டாஸ்மாக் கடை அகற்ற ஆர்டிஓவிடம் கிராம மக்கள் மனு

திருத்தணி: திருத்தணி அடுத்த காசிநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஊர் பொதுமக்கள் ஆர்டிஓவிடம் கோரிக்கை மனு வழங்கினர். திருத்தணி அடுத்த திருத்தணி நாகலாபுரம் சாலையில் காசிநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.இந்த கடையின் அருகே சில கடைகளும் உள்ளன. இந்த கடைகளில் பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் அந்த பகுதியில் இருந்து அரசு பள்ளிக்குச் செல்லும் பள்ளி மாணவிகளை  குடிபோதை ஆசாமிகள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.

இதனால் மாணவிகள், பெண்கள் அப்பகுதியில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் திருத்தணி ஆர்டிஓ பவணந்தியை சந்தித்து கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  மனு கொடுத்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : RTO ,shop ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு