×

பாஜ மேலிட பொறுப்பாளர் 27ம்தேதி புதுவை வருகை

புதுச்சேரி,  ஜன. 22: அமித்ஷா உத்தரவுக்கிணங்க பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி வருகிற  27ம் தேதி புதுச்சேரி வருகிறார். அப்போது கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து  கூட்டணி பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. பாஜக தேசிய தலைமையின்  திடீர் அழைப்பின்பேரில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ  நேற்று முன்தினம் விமானம் மூலம் டெல்லி விரைந்தார்.  நேற்று முன்தினம்  அமித்ஷாவை சந்தித்த சாமிநாதன், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.பின்னர் அவருடன் சிறிதுநேரம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாராளுமன்ற  தேர்தல் கூட்டணி, புதுச்சேரிக்கான பாஜக வேட்பாளர் தேர்வு, மற்றும்  புதுச்சேரி அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதன்  தொடர்ச்சியாக வருகிற 27ம்தேதி புதுச்சேரி மாநிலத்துக்கான பாஜக மேலிட  பொறுப்பாளரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான ரவி, புதுச்சேரிக்கு வருகை  தருகிறார்.  அன்றைய தினம் புதுவை பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை  நடத்துகிறார். அப்போது பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்  என்று தெரிகிறது. அவரது வருகையை மாநில பாஜக தலைவர் சாமிநாதன்  உறுதிப்படுத்தி உள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...