×

91 தொடக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பு துவக்கம்

திருவள்ளூர்: மாவட்டம் முழுவதும் 91 தொடக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குழந்தைகளுக்கு, முன்பருவக்கல்வி அளிக்கவும், கே.ஜி., வகுப்புகள் துவக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் துவங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில், 91 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கே.ஜி. வகுப்புகள் துவக்க தேர்வு செய்யப்பட்டன.

இந்த வகுப்புகள் துவக்குவது மற்றும் மாணவர் சேர்க்கை குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர் மற்றும் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று சேர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, கடந்த 18ம் தேதி தொடங்கியது.  மேலும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, கே.ஜி. வகுப்பு நடத்த நியமிக்கப்பட்டனர். கே.ஜி., வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்  பணி ஆணைகளை பெற்றுக்கொண்டனர். பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மற்றும் கே.ஜி. வகுப்புகளுக்கான விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளன.

Tags : LKG ,schools ,start ,Class ,
× RELATED பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் இன்றைய சொத்து மதிப்பு பூஜ்யம்