×

மாற்றுப்பாதையில் செல்லும் வாகனங்கள் புவனகிரி- விருத்தாசலம் சாலை அகலப்படுத்தும் பணி நிறுத்தம்

புவனகிரி, ஜன. 22: புவனகிரி- விருத்தாசலம் சாலை அகலப்படுத்தும் பணி திடீரென நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.விருத்தாசலத்தில் இருந்து பரங்கிப்பேட்டை வரை உள்ளது மாநில நெடுஞ்சாலை. இந்த சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலை ஓரங்களில் இருந்த வீடுகள், கடைகள், பயணிகள் நிழற்குடைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி துவங்கியது.விருத்தாசலத்தில் இருந்து புவனகிரி வரை சாலையை அகலப்படுத்தி உயரமான சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்தது. இந்த பணிகள் சில இடங்களில் மட்டுமே நடந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலையில் பல இடங்களில் பள்ளங்களும், சில இடங்களில் சாலையே முற்றிலுமாக பெயர்ந்தும் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு தரமற்ற சாலையாக இந்த சாலை இருப்பதால் பொதுமக்களும், பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை சரியில்லாத காரணத்தால் அரசு பேருந்துகள் கூட இந்த வழித்தடத்தை கைவிட்டுவிட்டது. குறிப்பாக சிதம்பரத்தில் இருந்து சென்னை, சேலம், வேலூர், திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்கு செல்லும் பல பேருந்துகள் மாற்றுப் பாதையில் செல்கிறது.சிதம்பரத்திலிருந்து கீரப்பாளையம் வழியாக ஒரத்தூர், சேத்தியாதோப்பு சென்று பின்னர் சென்னை, வேலூர் போன்ற நகரங்களுக்கு பல பேருந்துகள் செல்கிறது. சில பேருந்துகள் புவனகிரி பங்களா வரை சென்று அதன் பின்னர் பழுதடைந்த இந்த சாலையை தவிர்த்துவிட்டு சாத்தப்பாடி, கொத்தவாச்சேரி, குறிஞ்சிப்பாடி வழியாக வடலூர் சென்று பின்னர் சென்னை, சேலம் போன்ற ஊர்களுக்கு செல்கிறது.
பஸ் போக்குவரத்து இல்லாததால் இந்த வழித்தடத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர். பல கிலோ மீட்டர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று பின்னர் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்துகளில் ஏறுவது போன்ற பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
அதையும் மீறி இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களும் பழுதாகி நின்று விடுகிறது. புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சொந்தமான அரசு ஜீப் இந்த சாலையில் சென்றபோது திடீரென பழுதடைந்து நடுரோட்டில் நின்றது. இந்த சாலையின் அவல நிலைக்கு வட்டாட்சியரின் வாகனம் பழுதாகி நிற்பதே ஒரு பெரிய சாட்சியாக உள்ளது. அதனால் புவனகிரி - விருத்தாசலம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து எளிதான போக்குவரத்திற்கு வாகனங்கள் செல்லும் வகையில் நெடுஞ்சாலை துறையும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள்







Tags : trans-boundary ,road ,workshop ,Bhuvanagiri-Vriddhachalam ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி