×

சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கும் முகாம்

கடலூர், ஜன. 22: கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையின மக்களாகிய கிறிஸ்தவ, இஸ்லாமிய, புத்த, சீக்கிய, பார்சி, சவுராஷ்டிர மற்றும் ஜெயின் பிரிவினர் பயன்பெறும் வகையில் தனிநபர் கடன் திட்டம், கல்விக்கடன் திட்டம், சுய உதவிக்குழுக் கடன் திட்டம், கறவைமாடு கடன் திட்டம் மற்றும் ஆட்டோ கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியான லால்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வருகின்ற 24.01.2019 அன்று முற்பகல் சுமார் 11.00 மணியளவில் கடன் வழங்கும் முகாம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் நடத்தப்பட உள்ளது.
இந்த கடன் வழங்கும் முகாமில் லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார். இம்முகாம் மூலம் தனிநபர் கடன்கள், சுயஉதவிக்குழு கடன்கள், கல்வி கடன்கள், கறவை மாடு கடன், ஆட்டோ கடன் ஆகிய கடனுதவி திட்டங்கள் வழங்கப்பட உள்ளன.

Tags :
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...