×

புயலால் சேதமடைந்து 67 நாட்களாகியும் சீரமைக்கப்படாத நேரடி நெல்கொள்முதல் நிலையம்

மன்னார்குடி, ஜன. 22: மன்னார்குடி ஒன்றியம் கண்ணாரப்பேட்டை அருகில் மெய்ப்பழத் தோட்டம் கிராமத்தில்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கஜா புயலால் சேதமடைந்த  கட்டி டம் மற்றும் மேற்க் கூரைகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 15ம் தேதி கஜா புயலினால் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஒன்றியங்களில் மிகப்பெரிய அளவில் சேதமடைந்தது. இதில் பல்வேறு ஊர்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் சேதமடைந்தன.இந்நிலையில் மன்னார்குடி ஒன்றியம் கண்ணாரப்பேட்டை அருகில் மெய்ப் பழத்தோட்டம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. மன்னார்குடி திருமக்கோட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம்  மற்றும்  இரும்பு தகடுகளால் புதிதாக போடப்பட்ட மேற்கூரைகள் புயலின் தாக்கத்தால் சேதமடைந்தன.திருவாரூர் மாவட்டத்தில் அதிக அளவிலான கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு உத்தரவிட்டதன் பேரில் இந்த கொள்முதல் நிலையமும் திறக் கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. புயல் கடந்து 67 நாட்கள் ஆகியும் சேதமடைந்த கட்டிடமும், மேற்கூரைகளும் சீரமைக்கப் படவில்லை. இந்நிலையில் இந்த நெல்கொள்முதல் செயல்படும் பகுதியின் அருகில் உள்ள கிராமங்களில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விவ சாயிகள் அறுவடை செய்த   நெல்லை கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்க முடியாத சூழல் நிலவுகிறது. பனிக்காலம் என்பதால் திறந்த வெளியில் கிடக்கும் நெல்மூட்டைகளில் ஈரப்பதம் அதிகம் ஆகிறது. அதனால் விற்பனை செய்வதில் சிக்கல் வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் இந்த நிலையத்தை நேரில் பார்வையிட்டு  சேதமடைந்த கொள் முதல் நிலைய கட்டிடம் மற்றும் மேற்கூரைகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : storm ,plywood station ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...