×

திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் சிங்கப்பூர் பெண் கோரிக்கை மனு - இலவச சட்ட உதவி மையத்தை அணுக அறிவுரை

முத்துப்பேட்டை, ஜன.22: திருவாரூர் கலெக்டரிடம் 2வது திருமணம்  செய்த கணவரை மீட்டு தரக்கோரி சிங்கப்பூர் பெண் மனு அளிக்க வந்தார். இலவச சட்ட உதவி மையத்தை அணுக கலெக்டர் அறிவுறுத்தினார்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த  பெருகவாழ்ந்தான் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்என்பவர்தனியார் நிறுவன ஓட்டுநராக  சிங்கப்பூரில் பணியாற்றினார். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனையில், பணியாற்றிய  செவிலியர் துர்கா தேவி  என்பவரை கடந்த 2016ம் ஆண்டு காதலித்து  திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான பெருகவாழ்ந்தான் வருகை தந்த ராஜ்குமாருக்கு அவரது குடும்பத்தினர் வட்டாக்குடி கிராமத்தை சேர்ந்த தனியார்பள்ளி ஆசிரியையான வேறொரு  பெண்ணுடன் நேற்று முன்தினம் (20ம் தேதி) திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். இதையறிந்த துர்காதேவி சிங்கப்பூரிலிருந்து ஆன்லைன் மூலம் திருவாரூர் எஸ்பி அலுவலகத்துக்கும் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்திற்கும் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை ஏதுமில்லை. இதனால் அதிருப்தியடைந்த துர்க்கா தேவி சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வந்து முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோதிவ்யனிடம் முறையிட்டு, பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர்சுப்ரியா வுடன் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்த பெருகவாழ்ந்தான் முத்து மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்துக்குள் போலீசாருடன் சென்று தனது கணவரை மீட்டு தரக்கோரி கோயில் மண்டபத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இந்நிலையில்  நேற்று  திருவாரூர் கலெக்டர்  நிர்மல்ராஜை நேரில் சந்தித்த துர்காதேவி தனது கணவனை மீட்டுத்தரக்கோரி மனு அளித்தார்.. அதனை பெற்றுக்கொண்ட  கலெக்டர்  நீதிமன்றத்தின் மூலம் அணுகும்படி  ஆலோசனை வழங்கினார்.  இலவச சட்ட உதவி மையத்தை நாடுவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். தற்போது இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகளை துர்காதேவி தொடங்கியுள்ளாார். இது குறித்து துர்காதேவி கூறுகையில்,கலெக்டரின் அறிவுரையின்படி கோர்ட்டில் செயல்படும் சட்ட உதவி முகாமில் மனுவளித்து காத்திருக்கிறேன். இதனை இனி சட்டப்படி
சந்திப்பேன்  என்றார்.

Tags : Singapore ,Tiruvarur ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...