×

அரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனே கூடுதலாக திறக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மன்னார்குடி, ஜன. 22; திருவாரூர்  மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக கூடுதலாக திறந்து உள்ளூர் விவசாயிகளின் நெல்லை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.
இதுகுறித்து  இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலா ளர், முன்னாள் எம்.எல்.ஏ வை.சிவபுண்ணியம் மன்னார்குடியில் வெளியிட் டுள்ள அறிக்கை:காவிரி டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்து வருவது வழக்கம். இதற்காக ஒரு குவிண்டால் நெல் பொது ரகத்துக்கு ரூ.1,800, சன்ன ரகத்துக்கு ரூ.1,840 என்று அரசு விலையை நிர்ணயித் துள்ளது,திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆண்டுதோறும்  வழக்கம் போல் 420 நேரடி நெல் கொள்முதல்  நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப் படும். ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் கொள்முதல் நிலையம் திறக்கப் பட்டுள்ளது. திறந்துள்ள கொள்முதல் நிலையத்திலும் பணியாளர்கள் மற்றும் சாக்கு, சணல் பற்றாக்குறை காரணமாக கொள்முதல் பணி முறையாக நடை பெறவில்லை.இதனால் உற்பத்தி செய்த நெல்லை உள்ளூர் விவசாயிகள் விற்பனை செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளூர் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் ஈரப்பதம், தூசி, கருக்காய் உள்ளது போன்ற பல காரணங்களை கூறி கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றனர்.
பிற மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளின் நெல்லையும், வெளி மாவட்டங் களைச் சேர்ந்த வியாபாரிகள் நெல்லையும் எவ்வித நிபந்தனையுமின்றி கொள்முதல் செய்து வருகின்றனர். இதனை அரசே திட்டமிட்டு செய்து வருவதாக சொல்லப் படுகிறது, இந்நிலையில் உள்ளூர் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் குறைந்த விலைக்கு வெளி மார்க்கெட்  வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அரசு அறிவித்த கூடுதல் விலையினை பெற முடியாமல் தனியாரிடம் நஷ்டத்திற்கு விற்பனை செய்யும் நிலைக்கு உள்ளூர் விவசாயிகள் தள்ளப் பட்டுள்ளனர். தனியார் வியாபாரிகள் விவசாயிகளிடம் வாங்கிய நெல்லை இருப்பு வைத்து கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி லாபம் சம்பாதித்து கொள்கின்றனர். ஒரு நாளைக்கு 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று கூறி தனியார் நெல்லை மட்டும் வாங்கி உள்ளூர் விவசாயிகளின் நெல்லை புறக்கணித்து வருகின்றனர். மேலும் உள் ளூர் விவசாயிகளின் நெல்லை நிபந்தனையின்றி எடுத்திட தேவையான  நட வடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்  என  வை.சிவபுண்ணியம் அறிக்கையில் கூறியுள்ளார்.


Tags : Communist Party of India ,Paddy Purchase Centers ,State ,
× RELATED நாட்டில் பாஜகவின் செல்வாக்கு...