×

வடுவூர் கோதண்டராம சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார்குடி, ஜன.22: வடுவூர் கோதண்டராம சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா  வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.மன்னார்குடிக்கு அடுத்த வடுவூரில் உள்ள புகழ் பெற்ற வைணவ தலமான வடுவூர் கோதண்டராமர்  ராமர் கோயிலில் வருடம் தோறும் தை மாதத்தில் ஸ்ரீ ராமரின் நட்சத்திரமான புனர் பூசத்தன்று தெப்பத் திருவிழா நடத்தப் படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன் தினம்  இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது. கோயிலில் இருந்து சீதா தேவி, லட்சுமணன், ஆஞ்சநேய சுவாமி சமேதராக புறப்பட்ட கோதண்டராமர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். அதனைத் தொடர்ந்து  கோயிலின் பின்புறம் உள்ள சரயு புஷ்கரணி தெப்பக் குளத்தில் கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான தெப்பத்தில் எழுந்தருளினார்.  பின்னர் விசேச தீபாராதனைகள், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டது.  பின்னர் வானவேடிக்கைகள் முழங்க தெப்போற்சவம்  நடைபெற்றது. தெப்பக் குளத்தில் மூன்று முறை வலம் வந்து  தெப்பத்தில் இருந்து அருள்பாலித்த கோதண்ட ராமரை குளத்தின் கரை களில் நின்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தெப்பத் திருவிழாவை முன்னிட்டு  ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : festival ,Tappu ,Vaduvur Kothandaram Swamy Temple ,devotees ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...