×

திருத்துறைப்பூண்டி மருத்துவமனை தெருவில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி

திருத்துறைப்பூண்டி,ஜன.22: திருத்துறைப்பூண்டி மருத்துவமனை தெருவில் போக்குவரத்து நெரிசலால்  மக்கள் கடும் அவதியடைகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதி கிராம பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி, வங்கிகளுக்கு திருத்துறைப்பூண்டி நகரத்திற்கு தான் வந்து செல்ல வேண்டும்.மேலும் தாலுகா அலுவலகம் போன்ற பல்வேறு அலுவலகத்திற்கும் இங்கு தான் வர வேண்டும்.  திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து வேதை சாலை வரை உள்ள ஒரே சாலையில் தான் அனைத்து பேருந்து மற்றும் வாகனங்கள் சென்று வர வேண்டும்.  இந்த சூழ்நிலையில் நகரில் சாலைகளின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாலும் சாலை விதிமுறைகளை யாரும் கடைப்பிடிக்காததாலும் தினந்தோறும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது நகராட்சி தெரு சாலை வழியாக அவரவர் தேவைக்கு இந்த வழியாக சென்று வருகின்றனர். நகராட்சி தெரு சாலைகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ஆஸ்பத்திரிதெருவில் 5க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளது. அவரச தேவைக்கு இந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தான் வருவார்கள். அதனால் எந்தநேரமும் ஆஸ்பத்திரி தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது.  நேற்று இதேபோன்று ஆஸ்பத்திரி தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஒரு மணிநேரத்திற்கு மேலாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.எனவே நகரபகுதியில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பாக நகராட்சி தெரு சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hospital ,street ,Tiruthuraipoondi ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...