×

ஒரே வீட்டில் பலர் வசிப்பதால் இலவச மனைப்பட்டா விரைந்து வழங்க வலியுறுத்தல்

காரைக்கால், ஜன.22: காரைக்கால் மாவட்டத்தில் ஒரே வீட்டில் பலர் வசிப்பதால், இலவச மனைப்பட்டாவை உரிய பரிசீலனை செய்து விரைந்து வழங்க வேண்டும் என, காரைக்காலில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஜனவரி மாதத்திற்கான 2ம் கட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று  காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், இதுவரை வந்துள்ள புதுவைக்குரல் இணையதள புகார்கள் மீது அரசுத்துறைகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்(பொ) விக்ராந்த்ராஜா அரசுத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்களின் நேரடி புகார்களை கேட்டறிந்தார். அப்போது பேசிய பொதுமக்கள் பலர், காரைக்கால் மாவட்டத்தில் ஒரே வீட்டில் பெற்றோர் மற்றும் அவர்களின் மகன், மகள் என அவர்களின் குடும்பத்தோடு பலர் வசிப்பதால், இலவச மனைப்பட்டாவை உரிய பரிசீலனை செய்து விரைந்து வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்ட மக்களுக்கு, புதுச்சேரி அரசு வழங்கிய கஜா புயல் நிவாரணம், பொதுமக்கள் வங்கி கணக்கில் இதுவரை வந்து விழவில்லை. எனவே அதனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சான்றிதழ்கள் வழங்குவதை எளிமையாக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
தொடர்ந்து, அரசுத்துறை அதிகாரிகளிடையே கலெக்டர் விக்ராந்த்ராஜா பேசும்போது, இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பொதுமக்கள் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அரசுத்துறையினர் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த துறையினருக்கு புதுவைக்குரல் இணையதளம் மூலமாக வரும் புகார்கள் மீதும் உறுதியான உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றார்.


Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்