×

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

324 மனுக்கள் குவிந்தனநாகை. ஜன.22: நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகள் வங்கி கடன் மற்றும் உதவித்தொகை கேட்டு 18 மனுக்களும், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கையை முன் வைத்து பொது மக்கள் 306 மனுக்கள் என 324 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. கஜா புயலின்போது மின் சீரமைப்பு பணியின் போது மின் கம்பத்தில் இருந்து விழுந்து இறந்த பணியாளர் சண்முகத்தின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.13 லட்சத்திற்கான காசோலையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு மாதாந்திர உதவித் தொகையும், வழங்கப்பட்டது. கூட்டத்தில் தனித்துறை கலெக்டர் வேலுமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் காமராஜ், மாற்றுத்திறனாளி நல அலுவலர் விக்டர்மரியஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Tags : meeting ,office ,Nagoy Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...