×

கஜா புயலின்போது சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை

நாகை, ஜன.22: பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ரஜேந்திரநாட்டார் நாகை கலெக்டரிடம் வழங்கி மனுவில் கூறியிருப்பதாவது:நாகை மாவட்டம் கடலோர கிராமங்கள் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி கஜா புயல் சீற்றம் மீனவர்களின் வீடுகளில் கடல் தண்ணீருடன் சேரும் புகுந்தது. மேலும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் அனைத்தும் சேதமடைந்தது. மேலும் பலன் தரும் மரங்கள் சேதம் அடைந்தது. வசிப்பிட வசதிகளை எல்லாம் இழந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தமிழக முதல்வர், மீனவளத்துறை அமைச்சர், கைத்தறி துறை அமைச்சர், நாகை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டது. அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் நேரில் வந்து ஆறுதல் கூறி உடன நிவாரணம் அறிவிப்பு செய்தனர். ஆனால் அறிவிப்போடு அவர்களின் வாக்குறுதிகள் நின்றுவிட்டது. இதுகுறித்து மக்கள் போராட்டம் நடத்த முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் கூறியவாறு நிவாரணம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. காவிரி டெல்டா கிராம பாசனதாரர் முன்னேற்ற சங்க பொதுச் செயலலாளர் கோபி கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தரங்கம்பாடி தாலுகா, மேமாத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்றும், மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் கஜா புயல் பாதிப்பிற்கான பணிகளை துரிதமாக மேற்கொண்டு நிவாரணம் வழங்கிடவேண்டும், கடந்த ஆண்டு 2018 சம்பா, தாளடிக்கான பயிர் காப்பீட்டு தொகைக்கான கிராம விகிதாச்சாரத்தை வெளிப்படையாக தெரிவித்து உடனே தொகையினை வழங்க வேண்டும் என்று தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : storm ,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...