×

ஆம்வே கிளிஸ்டெர் ஹெர்பல்ஸ் டூத் பேஸ்ட் அறிமுகம்

சென்னை, ஜன.22:  நாட்டின் மிகப்பெரிய FMCG நேரடி விற்பனை நிறுவனமான ஆம்வே இந்தியா, தன்னுடைய சமீபத்திய தயாரிப்பான ‘கிளிஸ்டெர் ஹெர்பல்ஸ் டூத் பேஸ்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மூலிகை வாய்ப் பராமரிப்புத் தயாரிப்பானது, பல மூலிகை உட்பொருட்களை சிறந்த சுவை மற்றும் மகிழ்வூட்டும் வண்ணத்துடன் நன்கு கலந்து, எல்லாருடைய சுவை எதிர்பார்ப்புகளுக்கும் பொருந்த செய்கிறது. கிளிஸ்டெர் ஹெர்பல்ஸின் அறிமுகத்தை அறிவித்த  ஆம்வே இந்தியாவின் தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி சந்தீப் ஷா, கிளிஸ்டெர் எங்களுடைய மிகப் புகழ்பெற்ற உலக பிராண்ட்களில் ஒன்றாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக நன்கு விற்றுவரும் இந்த பிராண்ட் உலக அளவில் பல மில்லியன் பேருடைய நம்பிக்கையை வென்றுள்ளது.
அவர்களுடைஒய வாய்ச் சுகாதாரப் பழக்கவழக்கங்களின் ஒரு முக்கியப் பங்காக இருந்துள்ளது. மிகச்சிறந்த தரமான பொருட்களை வழங்குகிற எங்களுடைய அர்ப்பணிப்புணர்வுக்கு ஏற்பவும், தொலை நோக்கு நல வாழ்க்கைக்கான இயற்கை மற்றும் மூலிகை மாற்றுகளுக்கு அதிகரித்துவரும் தேவையை நிறைவுசெய்யும் வகையிலும், எங்களுடைய முதன்மை பிராண்டின் நீட்சியாகவும் கிளிஸ்டெர் ஹெர்பல்ஸ் அமைகிறது.
எங்களுடைய இந்திய வாடிக்கையாளர்களுக்காக உள் நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Introduction ,
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...