×

8ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் 6 பெண்கள் உள்ளிட்ட 46 சிறைக் கைதிகள் தேர்வு எழுதினர்

நெல்லை, ஜன. 22:  தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. நெல்லை மாவட்டத்தில் 6 பெண் கைதிகள் உள்ளிட்ட 46 பேர் தேர்வு எழுதினர். நெல்லை மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 550 பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.  சிறைவாசிகளுக்கு பாளை மத்திய சிறையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டிருந்தது. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் 431 பேர் தேர்வு எழுதினர்.

பாளை. மத்திய சிறையில் உள்ள கைதிகள் 30 பேருக்கு 8ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக ஆசிரியர்கள் பிரபாகரன், குமார், உமாமகேஸ்வரி ஆகியோர் கல்வி கற்றுக் கொடுத்தனர். பாளை. மத்திய சிறையில் உள்ள மையத்தில் 46 சிறை கைதிகள் இத்தேர்வை எழுதினர். இவர்களில் மதுரை மத்திய சிறையை சேர்ந்த 6 பெண் கைதிகள் மற்றும் 12 ஆண் கைதிகளும் அடங்குவர். சிறை வளாகத்தில் நடந்த தேர்வை சிறப்பு கல்வி அதிகாரிகள் கண்காணித்தனர். தேர்வு மையங்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலா மற்றும் கல்வி அலுவலர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். வருகிற 25ம் தேதி வரை இத்தேர்வு நடக்கிறது.

Tags : prison inmates ,women ,examination ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...