×

மணப்பாட்டில் திமுக கிராமசபை கூட்டம்

உடன்குடி, ஜன. 22: மணப்பாட்டில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ  பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  மணப்பாடு ஊராட்சி மன்றம் அருகே நடந்த இந்த கிராமசபை கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் பாலசிங் தலைமை வகித்தார். மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெசி பொன்ராணி, வர்த்தக அணி மாவட்ட துணைஅமைப்பாளர் ரவிராஜா, சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் மெராஜ், மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜெர்சன், ஊர்தலைவர் அல்போன்ஸ், துணைத்தலைவர் சேகர்  முன்னிலை வகித்தனர். மணப்பாடு ஊராட்சி செயலர் மைக்கிள் வரவேற்றார்.

 இதில் பங்கேற்ற தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை சீரமைத்தல், சீரான குடிநீர் வசதி, சுனாமிநகர் குடியிருப்புக்கு சாலை வசதி என மக்கள் பல்வேறு கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட  அதிகாரிகளிடம் பேசி விரைவில் நிறைவேற்றிதருவதாக எம்எல்ஏ உறுதியளித்தார். இதேபோல்  வியாகப்பர் ஆலய கமிட்டி செயலாளர் வினோஜின் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ, மணப்பாட்டில் குப்பைகளை அகற்ற திமுக சார்பில் ரூ.84ஆயிரம் வழங்கப்படும் என்றார். மேலும் ஆசிரியை மேரிகாந்தி கோரிக்கையை ஏற்று மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குவதாகவும் கூறினார்.

 கூட்டத்தில் மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட பொருளாளர் ராமநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வசீகரன், சிறுபான்மை நலஉரிமைப்பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் சிராஜூதீன், தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாணவர் அணி ஒன்றிய அமைப்பாளர் பாய்ஸ், இளைஞர் அணி நகர அமைப்பாளர் அஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : DMK ,meeting ,Mankulam ,
× RELATED திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்