×

புத்தன்தருவையில் விளையாட்டு மைதானம்

சாத்தான்குளம், ஜன. 22: சாத்தான்குளம் அருகேயுள்ள  புத்தன்தருவையில்  எஸ்டிபிஐ கட்சி சார்பில் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிளைத் தலைவர்  ரியாஸ் தலைமை வகித்தார். செயலாளர்பீர் முகைதீன் முன்னிலை வகித்தார். இதில் புத்தன்தருவையில் கட்சிக் கொடிக்கம்பம் நடுவது.     கச்சேரித் தெரு மற்றும் பெரியதெருவில் வேகத் தடை அமைப்பது. சின்னப்பள்ளி மேல மற்றும் கீழத்தெரு மற்றும் புதுவீட்டுத் தெருவில் சிமென்ட் சாலை  அமைப்பது. இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளிப்பது. குடிநீர், நிலத்தடிநீர் பிரச்னைகளை தீர்க்க கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் பலனில்லை. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம்  நடத்துவது. புத்தன்தருவையில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயல்வீரர்கள், உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர். பொருளாளர்  முகைதீன் நன்றி  கூறினார்.

Tags : Playground ,Puthenthurai ,
× RELATED மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை...